₹.100/- மண் பானைக்கு பேரம் பேசும் மக்கள்…. 80 (₹.1600/-)திர்ஹமுக்கு கௌரவமாக வாங்கும் காட்சி..

தமிழகத்தில் பாரம்பரியம் மற்றும் தொன்மையான தொழில்களில் ஒன்று மண் பானை மற்றும் சார்ந்த தொழில், இன்றளவும் குடிசை தொழிலாக சாலையோரத்தில் வியாபாரம் செய்வதையும், அம்மக்களிடம் 5க்கும் 10க்கும் பேரம் பேசுவதை காண முடியும்.

ஆனால் அதே தொழிலை ஊக்குவிக்கும் வண்ணம் அமீரகம் மற்றும் சவுதியில் உள்ள பல் பொருள் அங்காடிகள் ஊரில் ₹.100/- மதிப்புள்ள பொருளை இந்திய மதிப்பு 1000க்கும் கூடுதலாக அழகுபடுத்தி விற்பதை காண முடியும். அதுவும் மக்கள் அதை மிகவும் ஆர்வத்துடனும் எந்த பேரம் பேசும் சிந்தனையும் இல்லாமல் வாங்கி செல்வதை காண முடியும். இதே போன்று நம் தாய் நாட்டிலும் நலிவடைந்து வரும் தொழிலை ஊக்குவிக்கும் வண்ணம் தொழிலாளிக்கு நல்ல லாபம் தரும் வகையில் வாங்கி உதவினால், நலிவடைந்த தொழிலும் உயிர் பெரும், இத்தொழில் செய்பவர்களின் வாழ்வும் வளம் பெரும்.

To Download Keelainews Android Application – Click on the Image

சத்தியபாதை மாத இதழ்..

சத்தியபாதை மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..

Be the first to comment

Leave a Reply