Home செய்திகள் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள சான்று வழங்கும் முகாம்..ஏதுவாக இடமாற்றம் செய்து உத்தரவு..

மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள சான்று வழங்கும் முகாம்..ஏதுவாக இடமாற்றம் செய்து உத்தரவு..

by ஆசிரியர்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டக்குழுவின் சார்பில் கடந்த 03.06.19 அன்று மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மாற்றுத்திறனாளிக்கான அடையாள சான்று வழங்கும் முகாம் திண்டுக்கல் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் நடைபெறுவதால் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ப்படும் சிரமங்கள் குறித்தும், அடையாள சான்று வழங்கும் முகாமை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு மாற்றினால் ஏற்படும் பலன்கள் குறித்தும் விரிவாக மனு அளிக்கப்பட்டது.

அதனடிப்படையில் நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் அடையாள சான்று உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்று வழங்கும் முகாமை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு மாற்ற உத்தரவிட்டார்.

அதனடிப்படையில் வருகிற 12.06.19 முதல் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் காலை 10.00 மணிமுதல் மதியம் 01.00 மணிவரை மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள சான்று வழங்கும் முகாம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திலேயே நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

சங்கத்தின் நியாயமான கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியருக்கும், இணை இயக்குனர் (நலப்பணிகள்) அவர்களுக்கும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கும் எங்களது சங்கத்தின் சார்பில் நன்றிகள்.

இந்த வாரம் முதல் அடையாள அட்டை முகாம் மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திலேயே நடைபெற இருப்பதால் புதிதாக அடையாள அட்டை உள்ளிட்ட மருத்துவ சான்று தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் யாரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வர வேண்டாம் என  P. செல்வநாயகம் – மாவட்ட தலைவர், S. பகத்சிங் – மாவட்ட செயலாளர், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், திண்டுக்கல் மாவட்டக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!