Home செய்திகள் இராமேஸ்வரத்தில் கலாம் அரசு கல்லூரி நடப்பு கல்வி ஆண்டில் தொடக்கம்.. அமைச்சர் மணிகண்டன் தகவல்..

இராமேஸ்வரத்தில் கலாம் அரசு கல்லூரி நடப்பு கல்வி ஆண்டில் தொடக்கம்.. அமைச்சர் மணிகண்டன் தகவல்..

by ஆசிரியர்

இராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் 2018 – 19 ஆம் கல்வி ஆண்டு பிளஸ் 1 மாணவ, மாணவியர் 9,018 பேர், பிளஸ் 2 மாணவ, மாணவியர் 9,532 பேருக்கு ரூ.22 கோடியே 94 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்ட உள்ளது.

மேலும், 2017-18 கல்வியாண்டு பிளஸ் 2 மாணவ, மாணவியர் 9,939 பேருக்கு ரூ.12 கோடியே 29 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் அரசின் இலவச மடி கணினி வழங்கப்பட உள் ளது. இதில் முதல் கட்டமாக 4,926 மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் இலவச மடி கணினி வழங்கும் பணியை தமிழக தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் மணிகண்டன் நேற்று தொடங்கி வைத்தார்.

இராமநாதபுரத்தில் நடந்த விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் அய்யணன் வரவேற்றார். ராமநாதபுரம் ஒன்றியத்தில் 16 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் வழங்கினார். அவர் பேசியதாவது: தமிழக பள்ளி பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு அரசின் இலவச மடிகணினி வழங்கும் திட்டத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2011 ஆம் ஆண்டு துவங்கி வைத்தார். தற்போது வரை 39 லட்சம் மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டுள்ளது. பாலி டெக்னிக் மாணவ, மாணவியருக்கும் இலவச மடி கணினி வழங்கும் திட்டம் விரிவு படுத்தப்பட்டுள்ளது. 2018-19 கல்வி ஆண்டு பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படுகிறது. அதி நவீன தொழில் நுட்ப வசதிகள் அரசின் இலவச மடிகணினியில் இணைக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவியருக்கு கல்வி சார்ந்த அனைத்து சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து பயன் பெறலாம். முன்னாள் ஜனாதிபதி மறைந்த அப்துல் கலாம் பெயரில் அரசு கலை, அறிவியல் கல்லூரி நடப்பு கல்வி ஆண்டில் ராமேஸ்வரத்தில் தொடங்கப்படும். மாவட்டத்தில் நிலவும் கோடை கால குடிநீர் பற்றாக்குறையை போக்க அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சாயல்குடி அருகே குதிரை மொழி எனும் இடத்தில் உவர் நீரை நன்னீராக்கும் திட்டத்தை அரசு நிறைவேற்ற உள்ளது என்றார்.

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, மாவட்ட கல்வி அலுவலர் பிரேம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!