Home செய்திகள் தமிழகத்தில் தேனி, இராமநாதபுரம், நெல்லை மற்றும் பல பகுதிகளில் நோன்பு பெருநாள் சிறப்பு தொழுகை…

தமிழகத்தில் தேனி, இராமநாதபுரம், நெல்லை மற்றும் பல பகுதிகளில் நோன்பு பெருநாள் சிறப்பு தொழுகை…

by ஆசிரியர்

இராமநாதபுரம்.

இராமநாதபுரம் நகர் தமுமுக., சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. கடந்த 30 நாட்கள் நோன்பு மேற்கொண்ட முஸ்லிம்கள் நேற்று மாலை வானில் ரமலான் முதல் பிறையை பார்த்தனர். இதனையடுத்து புனித ரம்ஜான் பண்டிகை கோலாகல கொண்டாட்டது துவங்கியது. இதன் தொடர் நிகழ்வாக ராமநாதபுரம் நகரின் பல்வேறு இடங்களின் ரம்ஜான் சிறப்பு தொழுகை இன்று நடந்தது. நகர் தமு முக ஏற்பாட்டில் நடந்த சிறப்பு தொழுகையில் ராமநாதபுரம் முன்னாள் மாவட்ட தலைவர் அன்வர், முகவை பரக்கத்துல்லா, நகர் பொறுப்பு குழு தலைவர் புரோஸ் கான், பொறுப்பு குழு உறுப்பினர்கள் மன்சூர் அலி, சதக் தம்பி, பாரிக், ராஜா முகமது, உள்பட பலர் பங்கேற்றனர்.

தேனி

தேனி மாவட்டம்பெரியகுளத்தில் ரம்ஜான் பெருநாள் திடல் தொழுகையில் அனைத்து முஸ்லிம் ஜமாஅத்தார்களும் கழந்து சிறப்பு தொகை நடத்தினர் மத நல்லிணக்கத்திற்கும் மழைக்காகவும் விவசாயம் செளிக்கவும் பிராத்தனை செய்தனர்.

நெல்லை

மத நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கிய ஈகை பெருநாள் கொண்டாட்டம். நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் ஈகை பெருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 6 இடங்களில் நடைபெற்ற பெருநாள் தொழுகைகளில் 10,000 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். ரமலான் பிறை 29 நாட்கள் முடிந்ததை  அடுத்து ஷவ்வால் பிறை வானில் தெரிந்ததை தொடர்ந்து கடையநல்லூரில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆறு இடங்களில் பெருநாள் தொழுகை திடல்களில் நடத்தப்பட்டது.

காயிதே மில்லத் திடல், அதன் பின்னர் அருகே உள்ள பெரியதெரு, புதுத்தெரு ,மணிக்கூண்டு ஆகிய இடங்களிலும் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் அதிகாலை 6 மணி முதல் இஸ்லாமிய ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர்,சிறுமியர்களும் குளித்து விட்டு நறுமணம் பூசி  தொழுகைக்காக காயிதே மில்லத் திடல் நோக்கி வரத் தொடங்கினர். சரியாக 6.30 மணியளவில் வளைகுடா மண்டல தலைவர் முகம்மது நாஸிர் தலைமை ஏற்று பெருநாள் சிறப்பு தொழுகையை நடத்தினார்.

இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் ஷாகுல்கமீது, ஹாஜாதீன், ஹைதர் அலி, அப்துல் பாசித், செய்யது மசூது மாவட்டசெயலாளர் அய்யூப்கான், பஜார் கிளை தலைவர் குறிச்சி சுலைமான்,  ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். பெருநாள் சிறப்பு தொழுகைக்கான ஏற்பாடுகளை டவுன் கிளை சார்பில் சிறப்பாக செய்து இருந்தனர்.

இது போன்று பேட்டை கிளை சார்பில் மர்க்கஸுந் நூர் தவ்ஹீத்  திடலில் அப்துல் அஜீஸ்,ரஹ்மானியாபுரம் 3வது தெரு மர்யம் பள்ளி திடலில் காராஸ் மைதீன் , மக்காநகர்  8வது தெரு தவ்ஹீத் திடலில் முகம்மது தாஹா, தவ்ஹீத்  நகர் அல் ஹிதாயா திடலில் ஹாமித் , இக்பால் நகர் தெப்பதிடலில் குல்லி அலி ஆகிய 6 இடங்களில் நடை பெற்றது. இந்த பெருநாள் தொழுகையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .

அதை போல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மேற்கு மாவட்டம் சார்பில் தென்காசி, பொட்டல்புதூர், முதலியார்பட்டி, செங்கோட்டை, அச்சன்புதூர், வடகரை, வீரணம், சங்கரன்கோவில், புளியன்குடி, வாசுதேவநல்லூர், திரிகூடபுரம் உட்பட முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் 30 க்கும் மேற்பட்ட ஊர்களில் பெருநாள் தொழுகை நடைபெற்றது.

இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கடையநல்லூர்  தாசில்தார் தங்கராஜ் மேற்பார்வையில் புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் சக்திவேல் தலைமையில் காவல் ஆய்வாளர் கோவிந்தன் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.

தொழுகைக்கு முன்பாக தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கடையநல்லூர் நகர் முழுவதும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஃபித்ரா என்னும் நோன்பு பெருநாள் தர்மம் வழங்கப்பட்டது.

மேலும் கடையநல்லூரில் சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இன்றைய ரம்ஜான் பெருநாள் கொண்டாட்டம் அமைந்திருந்தது.

தொப்புள் கொடி உறவுகளுடன் பெருநாள் சந்தோசத்தை பகிர்ந்து கொண்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் தொப்புள் கொடி உறவுகளுக்கு இனிப்புகள் வழங்கி பெருநாள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாய் திகழும் தமிழகத்தில் முஸ்லிம்களோடு மாமன் மச்சான் உறவோடு வாழும் பிற சமய மக்களின் உணர்வுகள்,இஸ்லாம் அன்பை போதிக்கும் மார்க்கம் என்பதை வார்த்தைகளில் குறிப்பிட்டது நெகிழ்ச்சியாக இருந்தது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!