அரபு நாடுகளில் ஈகைத் திருநாள் சிறப்பாக கொண்டாட்டம்..

புனித ரமலான் மாதம் நேற்றோடு நிறைவு பெற்றது. அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதமான முதல் நாளான இன்று (04/05/2019) ஈகைப் பெருநாள் சிறப்பாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், மற்றும் பல வளைகுடா நாடுகளில் பெருநாள் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. தொழுகையை தொடர்ந்து சிறப்பு பிரசங்கமும் நடைபெற்றது. அரபு மற்றும் வளைகுடா நாடுகளில் அதிகாலை 5.15 மணி முதலே பெருநாள் தொழுகை ஆரம்பம் ஆகி விட்டது.

அப்பெருநாள் தொழுகையில் உள்நாட்டு மக்கள் முதல் வெளிநாட்டு மக்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். தொழுகையின் நிறைவில் ஓருவருக்கொருவர் ஆரத்தழுவி பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். பெரியவர்கள் குழந்தைகளுக்கு மிட்டாய்களும், காசுகளும் கொடுத்து தங்களுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.

இந்த வருடம் சவுதி அரேபியா ரியாத் நகரில் பத்ஹா அழைப்பு மையம் சார்பாக தமிழ் பயானுடன் பெருநாள் தொழுகை சுலை எனும் பகுதியில் முதன் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இத்தொழுகையில் ஏராளமான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர்.

அதே போல் சவுதி அரேபியா புனித நகரான மதினாவில் ஈகை பெருநாளை முன்னிட்டு ஏராளமான கீழக்கரை சகோதரர்கள் ஒன்றுகூடி பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.


To Download Keelainews Android Application – Click on the Image

August Issue…

August Issue…