தேனி மாவட்டத்தில் கலைஞர் பிறந்த நாளில் பேரறிஞர் அண்ணாவை மறந்த பரிதாபம்..

அண்ணாவை மறந்த திமுகவினர்… தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3ஆம் தேதி முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் பிறந்த நாள் விழாவினை வெகு சிறப்பாக அறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி , இனிப்புகள் வழங்கி திமுகவினர் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம்.

இந்நிலையில் ஜூன் 3 ம் தேதியான இன்று முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் 96வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு பெரியகுளம் நகர திமுக சார்பில் அண்ணா சிலைக்கு எந்த மரியாதையும் செய்யப்படவில்லை.

மேலும  பாராளுமன்ற பொதுத் தேர்தல் மற்றும் 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலின் தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்ட போதிலும், முத்தமிழ் அறிஞர் கலைஞரால் பெரியகுளத்தில் திறந்து வைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவிக்கப்படாமல், கழக கொடி மரங்கள் நடப்படாமலும்உள்ளனர்.

தி மு கழகம் சார்பில் முன்னெடுத்துச் செல்லப்படும் கலைஞரின் பிறந்தநாள் விழா தற்சமயம் பெரியகுளம் நகர திமுக பொறுப்பாளர்களின் கவனக்குறைவால் இந்த வருடம் மந்த நிலையை அடைந்துள்ளது.  இனிவரும் காலங்களிலாவது கழக விழாவில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என கட்சியினர் கோரிக்கை விடுக்கின்றனர்.

இவண்.A.சாதிக்பாட்சா. நிருபர்.தேனி மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..