Home செய்திகள்கீழக்கரை செய்திகள் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகப் பணி..மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு..

திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகப் பணி..மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் குடிநீர் விநியோகப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் நேரில்  சென்று கள ஆய்வு செய்தார்.

கோடைகாலத்தில் தற்போதுள்ள வறட்சியான சூழ்நிலையில் பொதுமக்கள் சிரமப்படாத வகையில் சீரான குடிநீர் விநியோகித்திடும் விதமாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் குடிநீர் விநியோகம் பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடைகிறதா என்பதை உறுதி செய்திடும் விதமாக மாவட்ட ஆட்சித் தலைவர் கிராமங்களுக்கு நேரில் சென்று கள ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதனடிப்பiயில் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் கள ஆய்வு மேற்கொண்டார்.

திருப்புலலாணி பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தபோது,கிழக்கு கடற்கரை சாலை பிரதான பகுதியில் அமைந்துள்ள காவேரி குடிநீரில் தண்ணீர் கசிவு அதிகமுள்ள இடங்களில் குடிநீர் குழாய் அமைத்திட நடடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

சின்னபாளையரேந்தல் கிராம பெண்கள் வைத்த கோரிக்கை அடிப்படையில் கீழக்கரை நகராட்சிக்கு செல்லும் காவேரி லைனில் ஏர் வால்வ் பகுதி டேப் அமைத்திட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தில்லையேந்தல் ஊராட்சியில் ஆய்வு செய்த போது, மருதந்தோப்பு கிராமம் மற்றும் மீனாட்சிபுரம் கிராம பகுதிகளில் 74 குடியிருப்புகளில் உள்ள மக்களின் பயன்பாட்டிலுள்ள 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட காவிரி கூட்டுக் குடிநீர் விநியோக மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் முறையே குடிநீர் நிரப்பி சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அந்த பகுதியில் உள்ள மக்களின் இதர தண்ணீர் தேவையினை பூர்த்தி செய்திட ஏதுவாக புதிய உறைகிணறு அமைத்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மல்லல் ஊராட்சியில் ஆய்வு செய்த போது அந்த ஊராட்சியில் உள்ள மூஞ்சான் கிராமமானது, காவிரி கூட்டுக் குடிநீர் வரும் கடைநிலை கிராமமாகும்.குடிநீர் விநியோகத்தினை முறையே கண்காணித்து சீரான குடிநீர் வழங்கப்பவதை உறுதி செய்யவேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அந்த கிராமத்தில் ரூ.4.00 லட்சம் மதிப்பில் புதிதாக உறைகிணறு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதைஆய்வு செய்த ஆட்சியர் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறயாளர் முத்துகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா, மங்களேஸ்வரி, உதவி செயற்பொறியாளர் ஜம்பு முத்துராமலிங்கம் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!