Home செய்திகள் தரமற்ற பொருளை விற்று… பொறுப்பற்ற பதில் கூறிய “Reliance Fresh”… அரசாங்க கவனத்திற்கு கொண்டு சென்ற வாடிக்கையாளர்…

தரமற்ற பொருளை விற்று… பொறுப்பற்ற பதில் கூறிய “Reliance Fresh”… அரசாங்க கவனத்திற்கு கொண்டு சென்ற வாடிக்கையாளர்…

by ஆசிரியர்

மதுரை மாவட்டம் திருநகர் இரண்டாவது பேருந்து நிறுத்தத்தில் அமைந்திருக்கும்  “ரிலையன்ஸ் ப்ரஷ்” என்னும் பல்பொருள் அங்காடியில்  இன்று (02/06/2019) மதியம்  திருப்பரங்குன்றத்தை சேர்ந்த திரு பாக்கியராஜ் என்பவர் பச்சை பட்டாணி வாங்கியுள்ளார். அதில் உற்பத்தி தேதி டிசம்பர் மாதம் 2018 என்று போட்டு, 12 மாத காலம் வரை பயன்படுத்த உகந்தது எனவும் உத்திரவாதம் போட்டு இருந்ததுள்ளது.  அதன் அடிப்படையில் பொருளை வாங்கி  வீட்டுக்கு கொண்டு சென்றவருக்கு அதிர்ச்சி தரும் விதமாக பச்சை பட்டாணி கெட்டுப் போய்,  துர்நாற்றத்துடன் இருந்ததுள்ளது.

இதுகுறித்து ரிலையன்ஸ் நிறுவனத்தில் கேட்டபோது  பொறுப்பற்ற வகையில்  பதில் கூறியுள்ளனர்.  பின் அவர் உடனடியாக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரினம் மற்றும் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில்   சம்பவ இடத்திற்கு விரைந்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பாக்யராஜ் அவர்கள் வாங்கிய பச்சை பட்டாணி ஆய்வு செய்தபோது அது கெட்டு போய் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

மேலும் அந்த கடைகள் முழுவதும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வு செய்த பின் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு நாங்கள் இது அறிக்கையை மாவட்ட ஆட்சியாளரிடம் சமர்ப்பிப்போம் என உறுதி அளித்து விட்டு சென்றுவிட்டார்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இதே போன்று அழுகிப்போன கெட்டுப்போன பழங்களை விற்றதாக புகார் எழுந்தது அப்பொழுதே எச்சரிக்கை விடுத்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்கிறார்களா என்பது சந்தேகமாக உள்ளது. இதுபோன்ற  மிகப் பெரிய கடைகளில்  பொதுமக்கள் உணவு பொருள் வாங்கும் பொழுது மிகவும் எச்சரிக்கையுடனும், தயாரிப்பு தேதி பார்த்தும் வாங்க வேண்டும். மேலும  தள்ளுபடி என்ற பெயரில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்யவும் வாய்ப்புள்ளது, ஆகவே பொதுமக்களும் விழிப்புடன் இருப்பதை மிக அவசியம்.

 செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!