இன்று (31/05/2019) சர்வதேச புகையிலை தினம்… கீழக்கரை நகராட்சி சார்பாக விழிப்புணர்வு பேரணி…

இன்று (31/05/2019) சர்வதேச புகையிலை தினம் அனுசரிக்கப்படுகிறது.. அதன் தொடர்ச்சியாக  புகையிலையினால் வரும் தீங்கு மற்றும் சுற்றுப்புற அசுத்தம் ஆவது குறித்தும், கீழக்கரை நகராட்சி மேலாளர் தனலெட்சுமி தலைமையில் கீழக்கரை தாலூகா அலுவலகம் தொடங்கி லூலூ சென்டர் வரை விழிப்புணர்வு  ஊர்வலம்  நடைபெற்றது.

இந்த  ஊர்வலம் தொடங்குவதற்கு முன்னதாக அனைவரும் ஒன்றிணைந்து புகையிலையினால் வரும் தீங்கு குறித்து  உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்வில்  வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராசிக்தீன், வட்டார சுகாதார மேற்பாற்வையாளர் பக்கீர் முகம்மது, நகராட்சி சுகாதார ஆய்வாளர் பூபதி, அலுவலக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தகவல்: மக்கள் டீம்

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..