மதுரை ஜெய் ஹிந்த்புரம் வீரகாளியம்மன் கோயிலில் பங்குனி விழா கோலாகலம்…

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் அமைந்துள்ளது வீரகாளியம்மன் கோயில். இங்கு பங்குனி திருவிழா கொடியொற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. விழாவை முன்னிட்டு, 1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

10 ஆயிரத்து 108 பேர் வைகையாற்றில் இருந்து பால் குடம் எடுத்து வந்து பாலாபிஷேகம் செய்தனர். 17 பேர் பறக்கும் காவடி எடுத்து வந்தனர். இதில் ஒரு பறவைக் காவடியில் 5 பேர் அலகு குத்தி வந்தது மெய் சிலிர்க்க வைத்தது.

ஆயிரம் பேர் 10 அடி முதல் 40 அடி வரை வேல் குத்தி நேர்த்தி கடன் செய்தனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை (01/06/2019) முளைப்பாரி எடுத்து திரு வீதி உலா நடைபெற இருக்கிறது. அதனை தொடர்ந்து பொங்கல் விழா நடை பெற உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image