இராமநாதபுரத்தில் கோடை கால கிரிக்கெட் பயிற்சி முகாம் நிறைவு..

இராமநாதபுரத்தில் கோடை கால கிரிக்கெட் பயிற்சி முகாம் நிறைவு நாள் விழாவில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் 23 வயதிற்குட்பட்ட வீரர்களுக்கான கிரிக்கெட் பயிற்சி முகாம் கடந்த இரு வாரங்ளாக இராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் பயிற்சி நடந்தது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பயிற்சியாளர் அருள்வேலன் ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் சங்க பயிற்சியாளர் மகேந்திரன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 78 மாணவர்களுக்கு பயிற்சி அளித்து, தேவையான அனைத்து உபகரணங்கள் வழங்கப்பட்டது. பயிற்சி நிறைவு செய்த வீரர்கள் 2019 ஆம் ஆண்டுக்கான மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று விளையாட உள்ளனர். கிரிக்கெட் பயிற்சி நிறைவு செய்த வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் சங்க மாவட்டத் தலைவர் ரமேஷ் பாபு சான்றிதழ் வழங்கினார். மாவட்ட கிரிக்கெட் சங்க செயலர் சி. மாரீஸ்வரன் ஆண்டறிக்கை வாசித்தார். நிர்வாக குழு உறுப்பினர்கள் அப்பாஸ் அலி, ஜெய முத்துராமலிங்கம் ஆகியோர் பயிற்சி ஏற்பாடுகளை செய்தனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..