உசிலம்பட்டி அருகே அய்யனார் குளம் கிராமத்தில் ஜல்லிகட்டுபோட்டி கோலாகலம்…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அய்யனார்குளம் கிராமத்தில் கடசாரி நல்ல குரும்பன் கோவில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.

முன்னதாக மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். உசிலம்பட்டி வருவாய் கோட்டாச்சியர் முருகேசன் ஜல்லிக்கட்டுப் போட்டியை துவக்கி வைத்தார். விழாவில் 900 மாடுகளும் 264 வீரர்களும் கலந்து கொண்டனர் 4 சுற்றுகளாக நடைபெற்றது.

இப்போட்டியில் மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் போன்ற மாவட்டகளைச் சேர்ந்த மாடுகள் கலந்து கொண்டன. மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு காளை அடக்கினர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு மோட்டர் சைக்கிள், பித்தளை, பானை, அன்டா, கட்டில், பீரோ போன்றவை பரிசாக வழங்கப்பட்டன.

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..