Home செய்திகள் தூத்துக்குடியில் கனிமொழி நன்றி தெரிவித்த பின் பேட்டி…

தூத்துக்குடியில் கனிமொழி நன்றி தெரிவித்த பின் பேட்டி…

by ஆசிரியர்

யாரும் எளிதில்  துாத்துக்குடி மக்களை மிரட்டி விடமுடியாது; அவர்கள் பின் திராவிட முன்னேற்றக் கழகமும், நானும், கூட்டணிக்கட்சிகளும் இருக்கின்றோம் என கனிமொழி தெரிவித்தார்.

துாத்துக்குடி லோக்சபா தொகுதியிலிருந்து எம்.பி., யாக தன்னைத்   தேர்தந்தெடுத்ததற்காக, வீதி வீதியாக சென்று வாக்களார்களுக்கு கனிமொழி எம்.பி. நன்றி தெரிவித்தார்.  அப்போது அவர் பேசும் போது,, அத்தனை சகோதர்களுக்கும் சகோதரிகளுக்கும் என் சிரம் தாழ்ந்த மனமார்ந்த  நன்றியை காணிக்கையாக்குகிறேன். நாம் எத்தனையோ மிரட்டல்களை, அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு, இந்த  வெற்றியை பெற்றிருக்கிறோம்.  இந்தியா அளவிளே தமிழகமும், ஒரு சில மாநிலங்களும் தனித்துவத்தோடு விளங்குவதை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில் ஸ்டாலினின் தலைமையை ஏற்று இந்த மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறோம். நாம் எவ்வளவு தான் சுமூகமான சூழ்நிலையை உருவாக்க நினைத்தாலும், நாகரீகமான அரசியலை நடத்த நினைத்தாலும், சிலர் தோல்வியுற்ற நிலையிலும் துாத்துக்குடி மக்களை அச்சுறுத்தும் நிலை உள்ளது. என் தோல்விக்கு எல்லாம் நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்று மக்களை அச்சுறுத்தக்கூடிய வகையில் பேசக்கூடிய நிலையைப் பார்க்கிறோம்.நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். துாத்துக்குடி மக்களுக்கு யார் நினைத்தாலும் ஒரு தீங்கு ஏற்படுத்தி விடமுடியாது.  அவர்களுக்கு அரணாக, துணையாக  தி.மு.க.,வும் நானும், கூட்டணிக் கட்சியை  சேர்ந்தவர்களும் இருப்போம் என்பதை தெளிவாக தெரிவித்துக்கொள்கிறேன்.

நிச்சயமாக இந்த மக்களின் குரலாக  லோக்சபாவில் என் பதிவுகளை செய்வேன். இந்த மக்களுக்காக தொடர்ந்து போராடுவேன். எனக்கு வாக்களித்து, என்னை, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த மக்களுக்கு  நல்ல திட்டகளை கொண்டு வருவேன். இந்த பகுதியை இன்னும் வளப்படுத்த, இங்குள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க,  வசதிகளை அதிகப்படுத்தி தருவதற்கான முயற்சிகளை முன்னின்று செய்வேன் என கலைஞரின் மகளாக அந்த வாக்குறுதியை அளிக்கிறேன் என்றார்.

இரண்டாவது முறையாக பிரதமர் பதவி ஏற்கும் மோடி, அனைவரையும் அரவனைத்து கொண்டு, இ ந்தியா எல்லோருக்கும் சொந்தம் என்ற அந்த உணர்வை ஏற்படுத்தும் அரசாங்கத்தை உருவாக்கி நடத்த வேண்டும் என, கனிமொழி தெரிவித்தார்.

தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்ற கனிமொழி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக, நேற்று மாலையில் விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அப்போது, செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி, துாத்துக்குடியில் என்னை வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக, நான் இங்கு வந்துள்ளேன். அனைத்து மக்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல் வெற்றிக்கு பாடுபட்ட இரு மாவட்ட செயலர்கள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 

மக்களின் பிரச்னைகளை முன் வைத்து அதற்காக நான் பாடுபடுவேன். பிரதானப் பிரச்னையாக இங்கு தண்ணீர் பிரச்னை உள்ளது. தற்போது தண்ணீர் இல்லாத நேரத்தில் குளங்களை துார்வார வேண்டும் என்றார். பிரதமா் மோடி குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, இரண்டாவது முறையாக பிரதமா் பதவி ஏற்கும் மோடிக்கும் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மோடி, அனைவரையும் அரவனைத்து கொண்டு, இந்தியா என்பது எல்லோருக்கும் சொந்தம் என்ற அந்த உணர்வை ஏற்படுத்தும் அரசாங்கத்தை உருவாக்கி நடத்த வேண்டும். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வர வேண்டும்,  பொருளாதாரத்தில் இருக்க கூடிய சரிவையும், வேலையில்லா திண்டாட்டத்தையும் சரி செய்யும் முயற்சியை எடுக்க வேண்டும் . இவ்வாறு  அவர் கூறினார். பின், தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணித்தவர், திறந்தவெளி ஜீப்பில் நின்று  வீதி வீதியாக சென்று வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!