ஜூன் 15ல் கடலுக்கு தயாராகும் படகுகள் மீன்துறை அதிகாரிகள் ஆய்வு..

தமிழக கடல் வளத்தை பாதுகாக்கும் பொருட்டு சென்னை, கடலூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகபட்டினம், இராமநாதபுரம் உள்பட 13 கடலோர மாவட்டங்களில் ஏப்.15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டது.

இதனால் 10 ஆயிரத்திற்கும் விசைப்படகுகளில் தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் வருவாய் இழந்தனர். இக்கால கட்டத்தில் வலைகளை சரி செய்தல், படகுகளில் மராமத்து உள்ளிட்டவைகளை சரி செய்து படகுகளை ஜூன் 15 காலை தொழிலுக்கு அனுப்ப உரிமையாளர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், கடலுக்குச் செல்ல ராமேஸ்வரத்தில் தயாராக உள்ள 875 விசைப் படகுகளை மீன்வளத் துறை அதிகாரிகள் 69 பேர் தலா இருவர் வீதம் 23 குழுக்களாக ஆய்வு மேற்கொண்டனர். படகுகளின் பதிவு எண், உரிமங்கள் தொடர்பான ஆவணம், படகுகளின் உறுதித்தன்மை, நீளம், அகலம் அளந்து ஆய்வு செய்தனர். குறைகள் கண்டறிந்த விசைப்படகுகள் ஜூன் 15 ஆம் தேதிக்குள் சரி செய்து ராமேஸ்வரம் மீன்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று தொழிலுக்குச் செல்லலாம் என அறிவுறுத்தினர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..