உசிலம்பட்டியில் பெய்த சூறாவளி மழையால் பல லட்சம் நஷ்டம்..

மதுரை மாவட்டம் உசிலம்பட்டிப் பகுதியில் நேற்று (30/05/2019)  இரவு சூறாவளிக் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. பன்னணப்பட்டி, நல்லுக்தேவன்பட்டி, பெருமாள்பட்டி ஆகிய கிராமப் பகுதிகளுக்கு செல்லும் பாதையிலுள்ள மரங்கல் சாய்ந் @து விழுந்தால் சாலைப் போக்குவரத்து வசதி துண்டிக்கப்பட்டது.

பல பகுதிகளில் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தால் இரவு முழுவதும் மின் வசதி துண்டிக்கப்பட்டது. கேபிள் வயர்கள் பல பகுதிகளில் அறுந்து விழுந்தால் இரவிலிருந்து கேபிள் சேவை முற்றிலும் தடைபட்டுள்ளது. இந்த சூறாவளிக் காற்றினால் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டிலுள்ள தனியார் மன மகிழ் மன்றம் மற்றும் ஒரு மொபைல் கடை முற்றிலும் பாதிக்கப்பட்டது அங்கிருந்த அனைத்து பொருட்களும் சேதமடைந்தன இதன் மதிப்பு ரூ 10 இலட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..