பணியின்போது சீருடை அணியாத அரசு டாக்டர் இராமநாதபுரம் ஆட்சியர் கண்டிப்பு..

இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் இன்று மதியம் 3:30 மணியைளவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். எம் ஆர் ஐ., ஸ்கேன் அறையை பார்வையிட்டார். இதனையடுத்து அவசரம் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவை ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு பணியில் இருந்த டாக்டர் விமல் சீருடை அணியாமலும், டாக்டருக்கான எவ்வித அடையாளமின்றி இருந்தார். அவரை ஆட்சியர் வீரராகவ ராவ் கடிந்து கொண்டார். அவசர சிகிச்சை விபத்தில் காயமடைந்த ஒரு வருக்கு ஆட்சியர் வீரராகவ ராவ் முன்னிலையில் மூத்த டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். மருத்துவமனை ஊழியர்களின் பணி மற்றும் வருகை பதிவேட்டை ஆட்சியர் ஆய்வு செய்தார். அப்போது டாக்டர் விமல் சீருடை அணியாமல் ஆட்சியர் முன்னிலையில் மீண்டும் வந்தார். செய்த தப்பை மீண்டும், மீண்டும் செய்யும் விமலிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புமாறு மருத்துமனை கண்காணிப்பாளர் ஜவகர்லாலிடம் அறிவுறுத்தினார்.

இதனை தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள இதர சிகிச்சை பிரிவுகளை ஆய்வு செய்தார். ஒவ்வொரு பிரிவிலும் உள்ள உள் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். ரத்த வங்கியை பார்வையிட்டு ரத்த வகை இருப்பு குறித்து கேட்டறிந்தார். மருந்தகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் . விவரம், பணி நேரம் குறித்து கேட்டறிந்து, தலைமை மருந்தாளுநர் ஜெய்சங்கரை வரவழைத்து உறுதிப்படுத்தினார். மருந்து சேமிப்பு கிடங்கில் மருந்துகளின் இருப்பு ஆய்வு செய்தார். ஆண்கள் வார்டு உள்நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். ஆய் ஆய்வின் போது சுகாதார நலப்பணிகள் இணை இயக்குநர் (பொறுப்பு) சகாய ஸ்டீபன் ராஜ், காச நோய் மருத்துவ துணை இயக்குநர் சாதிக் அலி, மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜவகர்லால், டாக்டர்கள் திருப்பதி, வள்ளி பிரியா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image