Home செய்திகள்கீழக்கரை செய்திகள் பொறுப்பார்ந்த மற்றும் ஆழ்கடல் மீன்பிடிப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி…

பொறுப்பார்ந்த மற்றும் ஆழ்கடல் மீன்பிடிப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி…

by ஆசிரியர்

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக இராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் மீன்வளத் தொழில்காப்பகம் மற்றும் தொழில்சார் பயிற்சி இயக்குனரகம் மற்றும் இராமநாதபுரம் மீன்வளத்துறையும் இணைந்து மீனவர்களுக்கான “பொறுப்பார்ந்த மற்றும் ஆழ்கடல் மீன்பிடிப்பு” குறித்த ஒருநாள் விழிப்புணர்வு பயிற்சி இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் 29.05.2019 அன்று நடைபெறற்து.

இப்பயிற்சியில் நாற்ப்த்திநான்கு மீனவர்கள் கலந்துகொண்டனர். இப்பயிற்சியை உதவி இயக்குனர் (மீன்வளத்துறை) திரு. ஜெயக்குமார் தொடங்கி வைத்து பேசும்போது பொறுப்பார்ந்த மற்றும் ஆழக்டல் மீன்பிடிப்பு முறைகளின் தேவைகள் பற்று எடுத்துரைத்தார்கள். முனைவர்கோ.சுகுமார், இயக்குனர் வழிகாட்டுதலின் படி இயக்குனரகத்தின் உதவிப் பேராசிரியர் திரு.மு.கலையரசன் சுற்றுச்சூழலை பாதிக்காத மீன்பிடிக் கருவிகளைக் கையாளுதல் மற்றும் கடல் வளத்தை அழிக்கக்கூடிய அபாயகரமான மீன் பிடி முறைகளால் ஏற்படும் பாதிப்புகள் என்ற தலைப்பில் விரிவான விளக்கவுரை நிகழ்த்தினார்.

மேலும் கடல் வளத்தினை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் குறித்த தொலைநோக்கு விழிப்புணர்வை வலியுறுதத்தினார். ஆழ்கடல் மீன் பிடிப்பில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் திட்டஙக்ளையும் விளக்கிக்கூறினார்.

மேலும் மீன்வளத்துறை ஆய்வாளர் திரு. தமிழ்மாறன் பேசும்போது ஆழக் டல் மீன்பிடிப்பு முறைகளை ஊக்கப்படுத்துதல் மற்றும் மீனவர்களுக்கான நலத்திட்டங்களை விவரித்தார். இப்பயிற்சிக்கு செல்வி.கோமதி மீன் வள உதவி ஆய்வாளர் இப்பயிற்சிகான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!