தலைமறைவாகிய பொது தகவல் அலுவலர்… நடவடிக்கை எடுக்க கோரும் வெல்ஃபேர் பார்ட்டி … .

சென்னை குடிநீர் வாரியத்தில் நடைபெறக்கூடிய முறைகேடுகளை ஆய்வு செய்வதற்காக வெல்ஃபேர் கட்சியின் சார்பாக சென்னை குடிநீர் வாரிய பகுதி-8 பொது தகவல் அலுவலருக்கு நேரில் ஆய்வு செய்ய தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 இன் கீழ் வெல்ஃபேர் பார்ட்டி சார்பாக மனு செய்யப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் இன்று 30.5.2019 காலை 9.00 மணி முதல் 1.00  மணி வரை ஆய்வு செய்வதற்கு அனுமதி அளித்துள்ளார்கள்.  ஆனால் அங்கு சென்றவர்கள்  பொது தகவல் அலுவலர் காணாதது போல்  சிறிது நேரத்திற்குள்ளாகவே அங்கு இருந்து தலைமறைவாகியைள்ளார். மேலும அங்கு சென்றவர்களை 4 மணி நேர காத்திருப்புக்கு பின்பும் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காது கால விரயம் செய்ததுடன் மிகப்பெரிய மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளார்.

கடமையை செய்யத் தவறிய பொது தகவல் அலுவலர் மீது மாநில தகவல் ஆணையம் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெல்ஃபேர் பார்ட்டி சார்பாக கோரிக்கை வைத்துள்ளது.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image