மதுரையில் மேம்பால பணிக்காக அவசியமில்லாமல் வெட்டப்படும் மரங்கள்..

மதுரை மாவட்டம் பைபாஸ் சாலை காளவாசல் பகுதியில் புதிதாக மேம்பாலம்  அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலம் கட்டுமான பணி நடக்கும் இடத்திற்கும்  சம்பந்தம் இல்லாத இடத்திலும் பணியாளர்கள் மரத்தை வெட்டி குவித்த வண்ணம்  உள்ளனர்.

இந்த மரங்களை வெட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம்  முறையான அனுமதிகள் பெறப்பட்டதா என்ற தகவலும்  இல்லை.  ஏன்? எதற்கு? மரங்களை வெட்டுகிறார்ரகள் என தெரியவில்லை என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். என் நிழலும் காற்றும், நமக்கு தரக்கூடிய மரங்கள் அனைத்தையும் அழித்து விட்டால் மழை எப்படி வரும் என்று ஆதங்கப்படுகிறார்கள். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளும், தேசிய நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..