வில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மையம் மற்றும் சத்தியபாதை கல்வி தர்ம அறக்கட்டளை இணைந்து நடத்திய பெண்களுக்கான மருந்தில்லா மருத்துவ முகாம்..

25/5/2019 அன்று மண்டபத்தில் வில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மைய அலுவலக வளாகத்தில் வில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மையம் மற்றும் சத்தியபாதை கல்வி தர்ம அறக்கட்டளை இணைந்து நடத்திய மருந்தில்லா மருத்துவ முகாம் நடைபெற்றது.வில் மெடல்ஸ் நிறுவனர் தலைவர் Dr.கலைவாணி வரவேற்புரை நல்க முகாம் இனிதே துவங்கியது. அக்குஹீலர்.நந்தகோபால்  கலந்துகொண்டு மக்களுக்கு நோய்களில் இருந்து தப்பித்து எப்படி நம் வாழ்வை நல் வாழ்வாக மாற்றலாம் என்று சிறப்புரையாற்றினார்.

இந்த முகாம் பெண்களுக்கு மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்ட முகாம் ஆகும். இம்முகாம் மாலை 4 மணிக்குத் துவங்கி மாலை 6.30 மணி அளவில் இனிதே நிறைவுபெற்றது. இந்த முகாமில் கலந்துகொண்ட பெண்கள் ஐயமின்றி தங்களுக்குள்ள நோய்கள் பற்றிய சந்தேகங்களைக்கேட்டு தெளிவுபெற்றனர். இந்த முகாமில் 25கும் மேற்பட்ட பெண்களும், 20கும் மேற்பட்ட குழந்தைகளும் கலந்து கொண்டனர்.

இறுதியில் வில் மெடல்ஸ் முதன்மைச்செயலர் Dr.தஹ்மிதா பானு நன்றியுரை நல்க முகாம் இனிதே நிறைவுபெற்றது. மீண்டும் இது போல் மருந்தில்லா மருத்துவ முகாம் நடத்த மக்கள் விரும்பிக்கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image