உசிலம்பட்டி அருகே குடும்ப தகராறில் 150 அடி மின் கோபுரத்தில் ஏறி போராட்டம் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு..

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மீனாட்சிபட்டியைச் சேர்ந்த கழுவன். கரும்பு ஜூஸ் கடை வைத்து நடத்தி வருகிறார் இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ள நிலையில் மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இன்று காலை வழக்கம் போல் தகராறில் ஈடுபட்ட நிலையில் கோபித்து கொண்டு சென்றவர் செக்காணூரணி டோல்கேட் அருகில் உள்ள 150 அடி மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை போராட்டத்தில் ஈடுபட்டார். மூன்று மணி நேரத்திற்கும் மேலாக குடும்பத்தினர் மற்றும் தீயணைப்புத் துறை, காவல்த்துறையினர் போராடிய நிலையில் குழந்தைகள் தந்தையை கீழே இறங்க சொல்லி கண்ணீர் விட்டு அழுது புழம்பினர். இறுதியில் மனைவியுடன் பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்பட்ட நிலையில் கீழே இறங்கி வந்தார்.

மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையின் அருகே இச் சம்பவம் நடந்ததால் 100க்கும் மேற்பட்ட மக்கள் கூடியதால் பாரபரப்பு ஏற்பட்டது..

To Download Keelainews Android Application – Click on the Image

September Issue…

September Issue…