சாயல்குடி அருகே பெண் வெட்டிக்கொலை.. கணவர் கைது..

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கடுகுசந்தை சத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி,65. இவரது மனைவி அழகுவள்ளி,60. இவர் அம்மன் கோயில் திருவிழாக்களுக்கு முளைப்பாரி வளர்க்கும் பணி செய்து வந்தார். கணவன், மனைவிக்கு குடும்ப பிரச்னையால் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அழகுவள்ளியை, குருசாமி அரிவாளால் தலை மற்றும் கழுத்தில் வெட்டினர். இதில் அழகு வள்ளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடம் வந்த கீழக்கரை காவல் துணை கண்காணிப்பாளர் முருகேசன், இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையில் போலீசார் குருசாமியை கைது செய்தனர். அழகு வள்ளி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கடலாடி தாலுகா தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். குருசாமி, அழகுவள்ளி ஆகியோரின் மகள் மாரிச்செல்வி, இராமநாதபுரம் அருகே புதுமடம் கிராமத்தில் கணவருடன் வசித்து வருகிறார்.

To Download Keelainews Android Application – Click on the Image

September Issue…

September Issue…