கொடைக்கானலில் வங்கியில் ரூபாய் 17 லட்சம் கையாடல்..

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகாவில் உள்ள கூட்டுறவு நகர வங்கியில்(Urban Bank) 17 லட்சம் ரூபாயை உறுப்பினர்கள் சேமிப்பு கணக்கில் ஏற்றி திருப்பி எடுத்து கையாடல் செய்த கூட்டுறவு நகர வங்கி அலுவலக உதவியாளர், கணினி அலுவலர், காசாளர் பொறுப்பில், இருந்த கொடைக்கானலை சேர்ந்த ரிச்சர்ட் (வயது 51) சரவணன் (வயது 41) சுசீந்திரன் (வயது 41) ஆகிய மூவரை திண்டுக்கல் வணிகவியல் குற்றப் புலனாய்வுத் துறை ஆய்வாளர் கவிதா தலைமையில் சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணி சேகர்பவுல்ராஜ், தேசிய தண்டபாணி மற்றும் காவலர்கள் கைது செய்து மதுரை JM நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு தொடர்பாக சிவகுமார்,விஜயகாந்த் ஆகிய இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

September Issue…

September Issue…