தேவிபட்டினத்தில் பாய்மர படகு போட்டி..

இராமநாதபுரம் அருகே தர்ம முனீஸ்வரர் கோயில் திருவிழாவையொட்டி பாய்மரப் படகுப் போட்டி நடந்தது. இராமநாதபுரம் தேவிபட்டினம் உலகம்மன் கோயில் படையாச்சி தெரு தர்மமுனீஸ்வரர் கோயில் 34 ஆம் வைகாசி பொங்கல் விழா மே 17 காப்பு கட்டி விரதம் துவக்கினர். எட்டு நாள் விழாவில் முக்கிய நிகழ்வாக பூக்குழி விழா மே 25 இரவு நடந்தது. இதில், பெண்கள் உள்ளிட்டோர் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவின் நிறை வாக பாய்மர படகுப் போட்டி நடைபெற்றது.

20 கி.மீ., தூர போட்டியில் ஒரு படகிற்கு தலா 5 பேர் வீதம் 20 படகுகளில் 100 பேர் கலந்து கொண்டனர். போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு தேவிபட்டினம் அரசு மருத்துவமனை டாக்டர் வித்யா மருத்துவ பரிசோதனை செய்து சான்றளித்தார். தேவிபட்டினம் போலீஸ் எஸ்.ஐ., அய்யனார் தொடங்கி வைத்தார். பட்சி ராஜன், குப்புச் சாமி, சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெற்றி பெற்ற படகு குழு வீரர்களுக்கு முதல் பரிசு தொகை ரூ.20 ஆயிரத்தை தேவிபட்டினம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் கணேச கண்ணன், இரண்டாம் பரிசு தொகை ரூ.15 ஆயிரத்தை கபிலன் டிராவல்ஸ் உரிமையாளர் கண்ணன், மூன்றாம் பரிசு ரூ.10 ஆயிரத்தை இராமநாதபுரம் பாஜக பிரமுகர் என். மகேந்திரன் ஆறுதல் பரிசு ரூ. 5 ஆயிரத்தை தேவிபட்டினம் உலகம்மன் கோயில் கமிட்டி சார்பில் வழங்கப்பட்டது.

To Download Keelainews Android Application – Click on the Image

September Issue…

September Issue…