ராஜபாளையத்தில் ஜேசிபி வாகனத்தை திருடி விற்க முயன்றவர்கள் கைது..

ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஜேசிபி வாகனத்தை திருடியதாக ராஜபாளையம் அருகே கொல்லங்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் வயது 25 நெல்லை மாவட்டம் குவளைக்கண்ணி கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் வயது 30 ஆகிய இருவரும் கைது.

இவர்கள் இருவரும் ஜேசிபி டிரைவர்கள் ஆவார்கள். இவர்கள் ஜேசிபி வாகனத்தை திருடி வத்திராயிருப்பு பகுதியில் நிறுத்தி விற்பனைக்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் சமயத்தில் ராஜபாளையம் தெற்கு குற்றப்பிரிவு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..