பேருந்து ஓட்டுனர்கள் போட்டியால் பாதிக்கப்பட்ட மாற்றுதிறனாளி..

தமிழகத்தில் தனியார் மற்றும் அரசு பேருந்துகளின் அடாவடியான வாகன ஓட்டும் முறையால் அதிகமான விபத்துக்கள் நடந்த வண்ணம்தான் உள்ளது.   கடந்த 22ஆம் தேதி மாலை 8 மணி அளவில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அருகே தேனி மாவட்டம் குமுளியில் இருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து அதிவேகமாகவும்,  தனியார் பேருந்தை முந்தும் வேகத்தில் வந்ததால் இரண்டு வேகத்தடைகள் மீது   வாகனத்தை இயக்கியதால் கடைசி இருக்கையில் இருந்த சுமார் ஐந்து பேர் வரையிலும் காயம் அடைந்துள்ளதாக அறியப்படுகிறது.  இதனால்  ஆத்திரமடைந்த பயணிகள் அரசு பேருந்து ஓட்டுனரையும் தாக்க முற்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் மதுரை ஜெயந்திபுரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான  ராஜா என்பவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு கடந்த பல நாட்களாக வீட்டிலேயே உள்ளார். இது சம்பந்தமாக அரசு போக்குவரத்து கழக மேலாளர்கள் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கிறார்கள்.  கடந்த ஆண்டு இதே இடத்தில்தான் 2 மாணவிகள் சாலையை கடக்கும் பொழுதும்,  அரசு பேருந்து மோதி இரண்டு இளைஞர்களும் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி வி. காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..