வெளிநாடு செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது கார் மோதியதில் மூவர் படுகாயம்…

மதுரை மேலூரை சேர்ந்தவர் வீரணன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். இன்று (25/05/2019) விடுமுறை முடிந்து வெளிநாடு செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு இரு சக்கர வாகனத்தில் தனது நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவனியாபுரம் வெள்ளக்கல் அருகே சென்று கொண்டிருந்த போது எட்டயபுரத்திலிருந்து மதுரை நோக்கி சென்ற கார் எதிர்பாரவிதமாக இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் சாலையில் தூக்கி வீசபட்டதில் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவனியாபுரம் போக்குவரத்து புலனாய்வு துறை போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை செய்து வருகின்றனர்.

கீழை நியூஸுக்காக மதுரை நிருபர் கனகராஜ்

To Download Keelainews Android Application – Click on the Image

September Issue…

September Issue…