திருமங்கலம் பகுதியில் மேற்கூரையை பிரித்து பல லட்சம் கொள்ளை…

திருமங்கலம் காமராஜர் வடபகுதியில் டிபார்ட்மென்ட் ஸ்டோரில் மேற்கூரையை உடைத்து ரொக்கப்பணம் 3 லட்சத்து 25000 பணம் உள்பட 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் காமராஜர் வடபகுதியில் டிபார்ட்மென்ட் ஸ்டோரின் மேற்கூரையை உடைத்து கடையிலிருந்த ரொக்கப் பணம் மூன்று லட்சத்து 26 ஆயிரம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உள்பட 5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து திருமங்கலம் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

திருமங்கலம் சோனை மீனா நகரைச் சேர்ந்தவர் ரகுபதி(45) காமராஜர் வடபகுதியில் இவர் சீனிவாசா டிபார்ட்மெண்டல் ஸ்டோர் வைத்துள்ளார். இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஊட்டி சென்று விட்டார் கடையில் வேலை பார்க்கும் பெண்கள் வழக்கம் போல் நேற்று கடையை திறந்து இரவு 10 மணிக்கு கடை அடைத்துள்ளனர். மறுநாள் கடையை திறக்க வந்தபோது கடையின் மேற்கூரை பிளேடால் அறுத்து உள்ளே நுழைந்து கடையில் இருந்த 3 லட்சத்து 25 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் மானிடர்கள் ஸ்டோரேஜ் ஹார்ட் டிஸ்க், 50 சிப்பம் அரிசி மூடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மொத்தம் ஐந்து லட்சம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து திருமணம் நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்து அதன் அடிப்படையில் திருமங்கலம் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமங்கலம் நகர் பகுதியில் மேற்கூரையை உடைத்து கொள்ளையர்கள் கொள்ளையடித்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

To Download Keelainews Android Application – Click on the Image

September Issue…

September Issue…