உசிலம்பட்டியில் இரு பகுதிகளில் 11 பவுன் தங்க நகை மற்றும் 20 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எ.இராமநாதபுரத்தில் தோட்ட ஒத்த வீட்டில் குடியிருக்கும் கல்யான சுந்தரம் (30) என்பவர் தனது மனைவியை பார்ப்பதற்காக இரவில் வீட்டின் கதவின் பூட்டை பூட்டிவிட்டு உசிலம்பட்டிக்கு சென்றிருந்த நிலையில் காலையில் வீட்டிற்கு வந்த பார்த்தபோது வீட்டின் கதவு மற்றும் பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த 11 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதே போல் அதே ஊரில் சிந்துபட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள தோட்ட ஒத்த வீட்டில் அழகுராஜா (45) என்பவரது வீட்டின் கதவு மற்றும் பீரோக்கள் உடைக்கப்பட்டு பிரிவில் இருந்த 20 ஆயிரம் ரொக்கப் பணத்தை திருடி சென்றனர்.

உடனே கல்யாணசுந்தரம் மற்றும் அழகுராஜா ஆகிய இருவரும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்த போலீசார் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

September Issue…

September Issue…