அதிமுகவின் ‘ஒரே’ எம்.பி தேனி குடிநீர் பிரச்சினையை தீர்க்க உறுதி..

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் ஒரே எம்.பி ஆன ரவிந்திரநாத் கூறியதாவது, “எனது வெற்றிக்கு பாடுபட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி அதுபோல பாரதப் பிரதமராக பொறுப்பேற்கவுள்ள நரேந்திர மோடி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்காக வாக்களித்த மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தேனி பாராளுமன்ற தொகுதியில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டியது குடிநீர் பிரச்சனை நான் தீர்த்துதருகிறேன். அந்த பிரச்சனையை முழுமையாக சேர்த்து தருவேன் அதற்கு பாடுபடுவேன் எனவும் தெரிவித்து கொள்கிறேன்.

இந்த இடத்தில் நல்லதொரு பதிலை மக்கள் தெரிவித்துள்ளார்கள் அமைச்சரவையில் இடம் பெறக்கூடிய கனவு எனக்கு கிடையாது. தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி நான் செயல்படுவேன் என தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

To Download Keelainews Android Application – Click on the Image

September Issue…

September Issue…