பரமக்குடி (தனி) சட்டமன்ற தேர்தல் 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி..

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற 2014 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் எஸ்.முத்தையா வெற்றி பெற்றார். முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர், அதிமுகவில் பிளவு ஏற்பட்டதால், டாக்டர் முத்தையா டிடிவி தினகரன் அணிக்கு தாவினார். இதனால் இவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

ஏப்., 18ல் நடந்த பரமக்குடி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக, திமுக வேட்பாளர்கள் உள்பட 13 பேர் போட்டியிட்டனர். இதில் 1,76,089 வாக்குகள் மற்றும் 1772 தபால் வாக்குகள் பதிவாகின.  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 14 மேஜைகளில் , 22 சுற்றுகளாக எண்ணப்பட்டன.

மே 23 காலை 11 மணிக்கு முதல் சுற்று முடிவு அறிவிக்கப்பட்டது. மே 24 அதிகாலை இறுதி முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன்படி, அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகர் 420 தபால் வாக்குகளுடன், 82,438 வாக்குகள் பெற்று 14,032 வாக்குகள் வித்தியாசத்தில திமுக வேட்பாளர்  சண்.சம்பத் குமாரை தோல்வியடைச் செய்தார். சம்பத் குமாருக்கு 68,406 வாக்குகள் கிடைத்தன. இதில் 909 தபால் வாக்குகள் அடங்கும். அமமுக., வேட்பாளர் டாக்டர் எஸ்.முத்தையா 212 தபால் வாக்குகளுடன் 9,672 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹேமலதாவுக்கு 40 தபால் வாக்குகளுடன் 6,710 வாக்குகள் கிடைத்தன. சங்கர் (மக்கள் நீதி மய்யம்) 5,421 வாக்குகள் பெற்றார். பதிவான 1,772 தபால் வாக்குகளில் 130 வாக்குகள் செல்லாதவை. 17 தபால் வாக்குகள் உள்பட 1616 வாக்குகள் நோட்டாவில் பதிவாகின. பரமக்குடி (தனி) சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றமைக்கான சான்றிதழை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடமிருந்து சதன் பிரபாகர் பெற்றுக் கொண்டார்.

To Download Keelainews Android Application – Click on the Image

September Issue…

September Issue…