திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன் சந்திப்பு..

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சந்தித்தார். தமிழகத்தில் வரலாற்று வெற்றியை பெற்றமைக்கு நன்றி, வாழ்த்து தெரிவித்தார்.

இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கே. நவாஸ்கனி வாழ்த்து பெற்றார். மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம.எல்.ஏ., மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜகான், மாநில துணைத்தலைவர் மௌலானா ஏ. ஷபிகுர் ரஹ்மான் மன்பஈ, மாநில செயலாளர் கே.எம். நிஜாமுதீன், மாநில துணைச்செயலாளர் எஸ்.ஏ. இப்ராம் மக்கி, முஸ்லிம் யூத் லீக் மாநில பொதுச்செலயாளர் அன்சாரி மதார், முஸ்லிம் மாணவர் பேரவை தேசிய பொதுச்செயலாளர் எஸ்.எச். முஹம்மது அர்ஷத், எம்.எஸ்.எப். மாநில பொருளாளர் லால்பேட்டை அஹமது, ஷேக் மதார், சல்மான் பாரிஸ் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி உருவாக்கப்பட்டு அதன் தலைவர் மு.க. ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டார். தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்து எந்த காலத்திலும் இல்லாத அளவுக்கு 38 நாடாளுமன்ற தொகுதிகளில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டித் தந்துள்ளார். இதற்கா மு.க. ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்தோம்.

இராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஏணி சின்னத்தில் கே. நவாஸ்கனி 1.25 லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். நாங்கள் நன்றி தெரிவித்தோம். எங்கள் வெற்றிக்காக பாடுபட்ட திமுக முன்னணி தலைவர்கள், நிர்வாகிகள், செயல்வீரர்கள், கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். மதம், சாதிகளை கடந்து வாக்களித்த தமிழக மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மத்தியில் நல்லாட்சி வரவேண்டு மென்ற நோக்கத்தின் அடிப்படையில் தான் தமிழக மக்கள் வாக்களித்தனர்.

தமிழகத்தில் கலைஞர் இல்லையே என்ற கவலை இருந்தது. கலைஞர் எப்படி செயல்படுவாரோ ஒருபடி மேலே சென்று மு.க. ஸ்டாலின் பிரச்சார வியூகங்களை அமைத்து சுறுசுறுப்பாக உழைத்தார். அவருடைய உழைப்பாலும், பிரச்சாரத்தாலும்தான் இந்த மாபெரும் வரலாற்று வெற்றி கிடைத்தது. தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையில் மதச்சார்பற்ற கூட்டணி அமைத்து பாடுபட்டதை போல ஒவ்வொரு மாநிலத்திலும் மு.க. ஸ்டாலினை போன்ற ஒருவரை தேர்ந்தெடுத்து பிரச்சாரம் செய்திருந்தால் மோடி ஆட்சி வந்திருக்காது. இதையும் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்தோம். தமிழகத்தில் அமைத்த இது போன்ற வியூகங்கள் போல எதிர்காலத்தில் மாநிலம் முழுவதும் உருவாக்க வேண்டும். தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு பாடுபடுவர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணை நிற்கும்.

தமிழகத்தில் 22 தொகுதி இடைத்தேர்தலில் திமுக 13 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. திருவாரூர் தொகுதியை தவிர 12 தொகுதிகள் அதிமுகவிடமிருந்து திமுக பெற்றிருக்கிறது. அந்த கட்சிக்கு முன்பு வாக்களித்த மக்கள் நம்பிக்கை இழந்து திமுகவிற்கு வாக்களித்து விட்டார்கள். திமுக தலைமையிலான கூட்டணியில் வகுக்கப்பட்ட கொள்கை, கோட்பாடுகளை இந்தியா முழுவதும் உருவாக்க வேண்டும். தமிழகத்திலுள்ள திராவிட பாரம்பரியம் போல் அமைய வேண்டும்.” என கூறினார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..