மதுரை விமான நிலையத்தில் ஓ.பி.எஸ் – ராஜேந்திர பாலாஜி பேட்டி..

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பாரதப் பிரதமர் மோடி பிரதமராக வேண்டும் என அகில இந்திய அளவில் தீர்ப்பு வந்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி தொடர வேண்டும் என மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர் என ஓ பன்னீர்செல்வம் கூறினார்.

அதே போல் மதுரை விமான நிலையத்தில் தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அளித்த பேட்டியில், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி தொடர வேண்டும் என்பது மக்களின் எண்ணம் மக்களின் பிரதிபலிப்பு தமிழகத்தில் பார்க்க முடிகிறது. இந்த ஆட்சியை நடத்துவதற்கு எவ்வளவு பெரும்பான்மை தேவையோ அதை எடப்பாடி ஆட்சிக்கு மக்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளார்கள்.

மக்கள் சிந்தித்து கொண்டிருக்கும் நேரத்தில் விஷத்தை விதைத்து அதன் மூலமாக திமுக அறுவடை செய்து உள்ளார்கள். ஒரு பொய்யான பிரச்சாரத்தை முன்னிலைப்படுத்தி அதை நம்பக்கூடிய வகையில் மக்களை கொண்டு சென்று அதன் மூலமாக அவர்கள் வெற்றியை அறுவடை செய்து உள்ளார்கள் இதை உறுதியான வெற்றியாக கருத முடியாது.

இந்தியா முழுக்க பாஜகவின் அலைதான் அடித்துள்ளது. ஆறு மாத காலமாக இந்த ஆட்சியின் மீது புழுதி வாரித் தூற்றுவது எடப்பாடி ஆட்சியின் மீது பொய்யான கருத்துக்களை கூறினார்கள். அதன் விளைவாக இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோ என்று ஒரு பிளவுபட்ட அல்லது மன குழப்பத்தில் மக்கள் வாக்களித்துள்ளனர்.

அதிமுக இரண்டாக பிரிந்து உள்ளது என கருத்தை பலமாக வைத்து தந்திரமாக வாக்குகளை திமுக கைப்பற்றியது. திமுக அதிமுகவை வீழ்த்தி இருந்தால் சட்டமன்றத்தில் நாங்கள் எப்படி வெற்றி பெற்று ஆட்சியை காப்பாற்றி இருக்க முடியும்.

சட்டமன்றத்தில் எடப்பாடி ஆட்சி தான் வேண்டும் மக்கள் அளித்த மிகப்பெரிய வரவேற்பு ஆதரவு இந்த ஆட்சிக்கு மக்கள் கொடுத்திருக்கின்ற வைரம் கீரிடம் தான் இந்த ஆட்சி. எங்களுக்கு நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை சரி செய்வதற்கு தேவையான காலகட்டம் இருக்கிறது அடுத்து வருகின்ற தேர்தலுக்கு இதைப் பயன்படுத்தி வெற்றியை நோக்கி செல்வோம். நாம்தமிழர், மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் பெற்ற வாக்குகள் தான் திமுகவின் தோல்விக்கு காரணம் என்ற கேள்விக்கு.

அவர் பிரித்தது இவர் பிரித்தது என்பது எல்லாம் காரணமில்லை பிரித்தவர்கள் எல்லாம் அழிந்து விட்டார்கள் அதிமுகவை அழிப்போம் என்று கூறியவர்கள் அழிந்து விட்டார்கள். எங்களுக்கு இனிமே போட்டி திமுக மட்டும்தான் திமுகவை எப்படி ஓரங்கட்ட வேண்டும் திமுகவை அடுத்த தேர்தலில் எப்படி பதம் பார்க்க வேண்டும் என்பதை கருத்திலும் எங்கள் நடவடிக்கையில் இருக்கும்.

அமமுக ஒன்றுமில்லாமல் போய்விடும் அங்கு இருப்பவர்கள் அனைவரும் வெளியே வந்துவிடுவார்கள். மதிமுக இப்படி ஆரம்பித்த இடத்திலேயே முடித்துவிட்டார்கள் அதேபோல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் முடிவுக்கு வரும். தினகரன் எத்தனை நாள் பொய் சொல்லி கட்சியை ஏமாற்ற முடியும்.

மத்திய அரசிடம் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் டெல்லியில் நல்ல நட்புறவு வைத்துள்ளார்கள்,  எனவே தேவையான நிதிகளை தேவையான திட்டங்களையும் மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து பெறுவார்கள். திமுக பெற்ற வெற்றி தமிழகத்தில் பூஜ்ஜியம் தான் எந்த ஒரு பலனும் கிடைக்காது. வாக்களித்த மக்களே நேற்று இரவில் இருந்து யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள் தேவையில்லாமல் திமுகவிற்கு ஆதரவு கொடுத்து விட்டோமோ என்று அவருடைய வெற்றியினால் ஒரு பைசா தமிழ்நாட்டிற்கு லாபம் கிடையாது

ஆனால் அதிமுக பாரதப் பிரதமர் மோடியிடம் பேசி தமிழகத்தின் நல்ல திட்டங்களை கொண்டு வந்து சாலை வசதி,  கட்டமைப்பு வசதி, மதுரையில் அமையவேண்டிய ஏய்ம்ஸ் கட்டுமான பணிகள் எல்லாத்தையும் நினைவுபடுத்தி தமிழ்நாட்டில் கவரக்கூடிய ஒரு வாய்ப்பு எங்கள் இயக்கத்தை பலப்படுத்த வேகமாக செயல்படக்கூடிய இந்த தேர்தல் களம் ஒரு பாடம். ரவீந்திரன் அவருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என்ற கேள்விக்கு, எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் அவர்கள் முடிவு எடுப்பார்கள் என கூறினார்.

பாஜக அசுர பலத்தில் வந்துள்ளது பாஜக தற்போது பலவீனமாக இல்லை, அதனால் யாரையும் எதிர்பார்த்து அவர்கள் இல்லை தமிழகத்திற்கு தேவையான நிதிகளை வழங்குவார்கள் ஆதரவாக இருப்பார்கள். தி மு க ஸ்டாலின் உத்தமபுத்திரன் மாதிரி அம்பானி குடும்பத்திலிருந்து பிறந்து வந்த மாதிரி பேசி வருகிறார்.

கஞ்சிக்கு இல்லாமல் வேட்டி சரியாக இல்லாமல் திருட்டு ரயிலில் வந்த கருணாநிதியின் மகன் தான் ஸ்டாலின் இன்று மிட்டா மிராசு மாதிரி பேசி வருகிறார். ஆசியாவில் ஏழாவது பணக்காரராக ஸ்டாலின் இருக்கிறார். 23ம் தேதி அனைவரும் ஜெயிலுக்கு சென்று விடுவார்கள். முதலமைச்சராக போகிறேன் என்று கலைஞர் கல்லறையில் தான் அமைச்சரவை பதவி ஏற்க வேண்டும் என்று இடம் பார்த்தார்கள். தமிழகத்தில் அவர் முதல்வர் ஆவதை மக்கள் விரும்பவில்லை இந்த சட்டமன்ற தேர்தல் மூலமாக தெரிகிறது

அவர் அதிக பெருபான்மையில் வெற்றி பெற்றால் கூட தமிழகத்தின் முதல்வராக முடியாது வாய்ப்பே இல்லை தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்தான் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

To Download Keelainews Android Application – Click on the Image

September Issue…

September Issue…