நெல்லையில் மறைந்த சாகித்ய அகாதமி விருதாளர் தோப்பில் முகமது மீரான்-நினைவேந்தல் கூட்டம்..

தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சாகித்ய அகாதமி விருதாளர் தோப்பில் முகமது மீரான் அவர்களுக்கான நினைவேந்தல் கூட்டம் 24.05.19 இன்று மாலை நெல்லையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு எழுத்தாளர் நாறும்பூநாதன் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் நாகர்கோவில் தக்கலை கலீமா, எழுத்தாளர் தீன், வரலாற்று ஆய்வாளர் செ.திவான்,தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருதாளர் கவிஞர் பேரா, கவிஞர் கிருஷி,கி.சந்திரபாபு உட்பட பலர் கலந்து கொண்டு சாகித்ய அகாதமி விருதாளர் மறைந்த தோப்பில் முகம்மது மீரான் அவர்களின் நினைவுகளை பதிவு செய்தனர்.

நிகழ்ச்சியில் தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருதாளர் கவிஞர் பேரா பேசுகையில்”சாய்வு நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்த தோப்பில் முகமது மீரான் அமரரானார் என்பது வருத்தமான ஒன்றுதான். ஒரு எழுத்தாளர் இந்த உலகில் தனது வார்த்துகளைத் தந்து செல்கிறார்கள்.ஆனால் தோப்பில் முகமது மீரான் தான் வாழ்ந்த எளிய வாழ்க்கை முறையையும் தந்துவிட்டுச் சென்றுள்ளார். அவரது சாய்வு நாற்காலி சாய்ந்ததில்லை…அது சாயாது…அதுபோல அவரது வார்த்தைகளூம் சாயாது…அவரது புகழும் சாகாது”என குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் கவிதை பாப்பாக்குடி முருகன், கவிஞர் சுப்பையா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..