Home செய்திகள் அ.தி.மு.க.வின் கோட்டை என கருதப்பட்ட திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அபார வெற்றி..

அ.தி.மு.க.வின் கோட்டை என கருதப்பட்ட திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அபார வெற்றி..

by ஆசிரியர்

மதுரையில் அதிமுகவின் கோட்டை என கருதப்பட்ட திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ளி தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் அபார வெற்றி பெற்றார். மொத்தம் பதிவான 2 லட்சத்து 25 ஆயிரம் வாக்குகளில் டாக்டர் சரவணன் 85 ஆயிரத்து 434 வாக்குகள் பெற்றார்.

எதிர்த்து போட்டியிட்ட அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் முனியாண்டி 83 ஆயிரத்து 38 ஓட்டுகளும், அ.ம.மு.க. வேட்பாளர் மகேந்திரன் 31 ஆயிரத்து 199 வாக்குகளும் பெற்றனர். மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சக்திவேல் 12 ஆயிரத்து 610 ஓட்டுகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரேவதி 5 ஆயிரத்து 467 ஓட்டுகளும் பெற்றனர்.

தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் 2 ஆயிரத்து 396 வாக்குகள் கூடுதலாக பெற்று அபார வெற்றி பெற்றார்.

வாக்கு எண்ணிக்கையில் 22 சுற்றுகள் எண்ணப்பட்டன. முதல் சுற்றில் இருந்து 8 சுற்றுகள் வரை ஒவ்வொரு சுற்றிலும் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார்.

9 முதல் 11 சுற்றுகள் எண்ணிக்கையின்போது அ.தி.மு.க. வேட்பாளர் முனியாண்டி கூடுதலாக ஓட்டுகளை பெற்று முன்னிலையில் இருந்தார். 12 முதல் 16 சுற்றுகள் வரை ஒவ்வொரு சுற்றிலும் தி.மு.க. வேட்பாளர் சரவணனும், அ.தி.மு.க வேட்பாளர் முனியாண்டியும் கூடுதலாக ஓட்டுகளை பெற்று வந்தனர்.

அடுத்த 17 முதல் 19 சுற்றுகளில் தி.மு.க. வேட்பாளர் சரவணன் முன்னிலையில் வந்தார். 20-வது சுற்றில் அ.தி.மு.க. முன்னிலையில் இருந்தது. அடுத்து வந்த 21, 22 வது சுற்றுகளில் தி.மு.க. வேட்பாளர் அதிகமாக ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றார்.

அ.ம.மு.க. வேட்பாளர் மகேந்திரன் 31 ஆயிரத்து 119 வாக்குகளை பெற்று, அ.தி.மு.க.வின் வாக்குகளை பிரித்து விட்டதால் அ.தி.மு.க தோல்வியை தழுவியதாக அதிமுகவினர் கூறுகின்றனர். திருப்பரங்குன்றத்தில் 1996,ம் வருடத்திற்கு பிறகு தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றதால்,தி.மு.க நிர்வாகிகளுக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கீழை நியூஸுக்காக மதுரை நிருபர் கனகராஜ்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!