நிலக்கோட்டையில் அ.தி.மு.க., பாரதிய ஜனதா கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்…

நிலக்கோட்டையில் உள்ள பாரதிய ஜனதா கட்சி மத்திய அளவில் அமோக வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக நிலக்கோட்டை நடு ரோட்டில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.

நிலக்கோட்டை  நகர தலைவர் பரசுராமன் தலைமை தாங்கினார். மாவட்டத் துணை மாவட்ட செயலாளர் கிருஷ்ண குமார், மாவட்ட மகளிர் அணி துணைச் தலைவி பிரித்தா முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் ராஜா, சதீஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போன்று நிலக்கோட்டை சட்டமன்ற இடைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக வேட்பாளர் எஸ் தேன்மொழி சேகர் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதிமுகவினர் நிலக்கோட்டை ரோட்டில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள். இந்நிகழ்ச்சிக்கு நிலக்கோட்டை நகர பொறுப்பாளர் முத்து தலைமை தாங்கினார்.. கொங்கர்குளம் கிளைச் செயலாளர் கருப்பையா, மற்றும் பொறுப்பாளர் பாலமுருகன் கலந்து கொண்டனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

சத்தியபாதை மாத இதழ்..

சத்தியபாதை மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..