வேலூரில் பாரதிய ஜனதா கட்சியினர் வெற்றி கொண்டாட்டம்..

மோடி மீண்டும் பிரதமர் ஆனதை ஒட்டிகாட்பாடியில் பாரதிய ஜனதா கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம். நடந்து முடிந்த இந்திய பாராளுமன்ற தேர்தலில் மோடி தலைமையில் ஆன பிஜேபி தனிப்பெரும் கட்சியாக 303 எம்.பி சீட் பெற்று சாதனை பெற்று மோடி மீண்டும் பிரதமராக வர உள்ளார்.

இதை கொண்டாடும் விதமாக வேலூர் கிழக்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் மாவட்ட தலைவர் தசரதன் தலைமையில் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட துணை தலைவர் ஜெகன் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

September Issue…

September Issue…