Home செய்திகள் TARATDAC முக்கிய அறிவிப்பு.. உதவி உபகரணங்கள் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்…

TARATDAC முக்கிய அறிவிப்பு.. உதவி உபகரணங்கள் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்…

by ஆசிரியர்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையும், அலிம்கோ நிறுவனமும் இணைந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உபகரணங்கள் வழங்குவதற்கான பயனாளிகளை தேர்வு செய்யும் முகாம் கீழ்க்கண்ட அட்டவணைப்படி காலை 10.00 மணிமுதல் 01.00 மணிவரை அந்தந்த பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெற உள்ளது. இம்முகாமில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த

மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று பயன்பெறலாம் என இதன் மூலமாக தெரிவித்துக்கொள்கிறோம். இம்முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை கால்,கை, காலிபர் சூக்கள், மின்சார மோட்டார் பைக், மூன்று சக்கர சைக்கிள், மோட்டார் வீல்சேர், சாதாரண வீல்சேர், ஊன்றுகோல், கைத்தடி, பார்வையற்றவர்களுக்கான மடக்கு குச்சி, கண்ணாடி, கடிகாரம், காதொலி கருவி, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு உபகரணங்கள் போன்ற பல்வேறு உபகரணங்கள் பெறுவதற்கான பயனாளிகளை தேர்வு செய்ய உள்ளார்கள். உபகரணங்கள் தேவைப்படும் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் கட்டாயம் இம்முகாமில் பங்கேற்று பயன்பெற வேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பு : இம்முகாமில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் – 2, மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை நகல், ஆதார் நகல் உள்ளிட்ட ஆவணங்களோடு கட்டாயம் மாற்றுத்திறனாளிகளின் தொலைபேசி எண்ணையும் கொண்டு வரவும்.

முகாம் நடைபெறும் நாள் மற்றும் இடங்கள் :

29.05.19 – பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் – பழனி, ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி ஒன்றியத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள்

30.05.19 – குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் – குஜிலியம்பாறை, வேடசந்தூர், வடமதுரை ஒன்றியத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள்

31.05.19 – செம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் – ஆத்தூர், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு ஒன்றியத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள்

01.06.19 – நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் – நத்தம், சாணார்பட்டி ஒன்றியத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள்

03.06.19 – கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் – கொடைக்கானல் ஒன்றியத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள்

04.06.19 – திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் – ரெட்டியார் சத்திரம், திண்டுக்கல் ஒன்றியத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள்

மாற்றுத்திறனாளிகள் இம்முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பில் P.செல்வநாயகம் – மாவட்ட தலைவர் S.பகத்சிங், மாவட்ட செயலாளர் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!