அவதூறு பேசிய எச்.ராஜா மீது வழக்கு பதிய கோரி 11கும் மேற்பட்ட கீழக்கரை சமூக நல அமைப்புகள் நாளை (22/05/2019) காவல்துறையினரிடம் மனு… பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகோள்…

சில தினங்களுக்கு முன்பு பாரதிய ஜனதாவை சார்ந்த எச்.ராஜா என்பவர் கீழக்கரை அனைத்து தரப்பு மக்களையும் கீழ்த்தரமாகவும், ஒற்றுமையை குலைக்கும் வண்ணமாகவும், கலவரத்தை தூண்டும் விதமாகவும் கீழ்தரமாக பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார்.  இது பொது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.  இச்செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (20/05/2019) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக காவல்துறையில் புகார் மனு அளிக்கப்பட்டது.

மேலும் இந்த விசயத்திற்கு அழுத்தம் கொடுக்கும் விதமாகவும், ஊரின் ஒற்றுமையை எடுத்துரைக்கும் விதமாகவும் கீழக்கரையில் உள்ள 11கும் மேற்பட்ட அமைப்புகள் இணைந்து காவல்துறையிடம் புகார்  மனு அளிக்க உள்ளனர்.  இதில் மஜ்மா உல் ஹைராத்தியா அறக்கட்டளை, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, வடக்கு தெரு சமூக நல அமைப்பு (NASA) , மக்கள் டீம், வீர குல தமிழர் படை, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்தியன் தவ்ஹீத் ஜமாத், மக்கள் நல பாதுகாப்பு கழகம், SDPI கட்சி, இஸ்லாமிய கல்வி சங்கம், நாம் தமிழர் கட்சி மற்றும் இன்னும் பல அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்கள் புகார் மனு அளிக்க நாளை (22/05/2019)  காலை 10:15 மணியளவில் நடுத்தெரு ஜும்ஆ பள்ளி அருகில் அனைவரும் கூடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..