Home செய்திகள் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரையும்.. உடைமையையும் இழக்கும் பல குடும்பங்கள்.. விழிப்புணர்வு அவசியம்…

ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரையும்.. உடைமையையும் இழக்கும் பல குடும்பங்கள்.. விழிப்புணர்வு அவசியம்…

by ஆசிரியர்

ஆன்லைன் சூதாட்டத்தால் பலியாகும் குடும்பங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்தான் உள்ளது.  லாட்டரியை தடை செய்த அரசு அதை விட மறைமுகமாக மக்களை கொள்ளையடிக்கும் ஆன் லைன் சூதாட்டமான ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளை தொலைகாட்சி விளம்பரத்துடன் அனுமதிப்பது மிகவும் வேதனையான விசயம்.  அதை விட முற்போக்கு சிந்தனை பேசிய சினிமா நடிகர்களே மக்களுக்கு ஏற்படும் கேடுகளை அறியாமல் பணத்துக்காக இது போன்ற விளையாட்டு விளம்பரங்களிலும் நடித்தது மிகவும் கொடுமையான விசயம்.

மேலும் இந்த விளையாட்டில் இணையும்படி தினமும்  லட்ச கணக்கான மக்கள் குறுஞ்செய்தி பெற்ற வண்ணம்தான் உள்ளார்.  அதிகமானோர் சாதாரணமாக கடந்து சென்றாலும், சிலர் இந்த மாயவலையில் சிக்கி உயிரையும், உடமையையும் இழக்கும் நிலைக்கு ஆளாகினார்கள். நேற்று (201/05/2019) மதுரை நாகமலை புதுக்கோட்டையில்  தற்கொலை செய்து கொண்ட தம்பதியினரும் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட கடன் தொல்லையினாலே தற்கொலை செய்து இருக்கலாம் என போலிசார் சந்தேகிக்கிறார்கள். இந்த தம்பதியினர் அவர்களுடைய தகுதிக்கு மீறி அதிக அளவில் பணத்தை இச்சூதாட்டத்தில் இழந்ததால் தற்கொலை செய்து இருக்கலாம் என அறியப்படுகிறது.

இந்த விசயத்தில் அரசாங்கம் தீர்க்கமான முடிவை எடுக்கவில்லை என்றால்  இன்னும் பல உயிர்கள் பலியாக நேரிடும்.  இதனை கருத்தில் கொண்டு சமூக ஆர்வலர்கள் பலர் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகளை கோரிக்கை விடுக்கிறார்கள்.  மேலும் இது சம்பந்தமான விளம்பரத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளை மீதும் கடும் நடவடிக்கை வேண்டும் ,  சூதாட்டத்திற்கு துணைபோகும் ஆன்லைன் நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,   இது போன்ற பலிகள் இனி எங்கும் நடக்காமல் இருக்க ப்ளே ஸ்டோரில் இருந்து ஆப்பை நீக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளார்கள்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!