தண்ணீர் பஞ்சம்… சிக்கன விளம்பரம் ஒருபுறம்… விரயம் மறுபுறம்.

தண்ணீர் சிக்கனம் என்பதை உபதேசம் செய்தால் மட்டும் போதாது, அதை கடைபிடிக்க வேண்டும் என்பதை அறியாமலே உள்ளது  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மதுரை மாநகராட்சி. மதுரை மாவட்டம் பழங்காநத்தம் மத்திய நுகர்பொருள் சேமிப்பு கிடங்கு நுழைவாயில் அருகே கடந்த ஆறு மாதங்களாக குடிநீர் குழாய் உடைந்து பல ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக சாலையில் ஓடுகிறது இதனால் சாலையும் பழுதாகி இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் அந்த பள்ளத்தில் விழும் நிலை உள்ளது.

மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோடை காலத்தில் ஒரு குடம் தண்ணீருக்காக மக்கள் அங்கே இங்கே என்று அலைந்து கொண்டிருக்கும் நேரத்தில் பல ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக சாலையில் செல்வதை கண்டும் காணாமல் இருக்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

மேலும் உடைந்து உள்ள குடிநீர் குழாயை சாலையும் உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..