நெல்லையில் நடைபெறும் அறிவியல் தொழில் நுட்ப கண்காட்சி…

நெல்லை அறிவியல் மையத்தில் சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு வரலாற்று அறிவியல் தொழில்நுட்ப கண்காட்சி 18.05.19 சனி கிழமை அன்று தொடங்கியது.

இந்த கண்காட்சியை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்து இது குறித்து அவர் கூறுகையில் பழங்கால பொருட்கள் குறித்த கண்காட்சியில் பல அபூர்வமான அரிய பல பொருட்கள் இடம் பெற்றுள்ளன. பல துறைகளிலும் நாம் எந்த அளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளோம் என்பதை இன்றைய மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் கண்காட்சி பயனுள்ள வகையில் அமைந்துள்ளது.

நம் நாட்டின் விஞ்ஞான வளர்ச்சியை அனைத்து தரப்பு மக்களும் அறிந்து கொள்ள நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.நெல்லை பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பியல் துறை மற்றும் தமிழ்த்துறை சார்பில் பழங்கால தொன்மையான பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. இன்னும் தொன்மையான பொருட்கள் சேகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

கண்காட்சியில் நாணயம் சேகரிப்போர் மற்றும் பொதுமக்கள் அரங்கம் அமைத்து இருந்தனர். அதில் 50 வருடங்களுக்கு முந்தைய பழங்கால பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், பழைய நாணயங்கள்,ஆங்கிலேயர் கால சைக்கிள்,கேமரா, ரேடியோ உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சியை ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர். 18.05.19 சனி அன்று துவங்கிய இந்த கண்காட்சி 19.05.19 இன்று மாலை 5 மணி வரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..