மதுரை டாஸ்மாக் கடையில் 500 மது பாட்டில்கள் திருட்டு..

மதுரை வரிச்சியூர் அருகில் உள்ள நாட்டார்மங்கலம் டாஸ்மாக் மதுபானக்கடையின் மேற்பார்வையாளராக ராதாகிருஷ்ணன் பணியாற்றி வருகிறார். ராதாகிருஷ்ணன் மற்றும் கடை ஊழியர்கள் சின்னச்சாமி, பாண்டியராஜன் சம்பவம் நடந்த அன்று இரவு கடையை பூட்டிவிட்டு சென்றனர். அதே இரவு மர்ம நபர்கள் கதவின் பூட்டை உடைத்து கடைக்குள் புகுந்து அங்கிருந்த ரூ.71,400 மதிப்புள்ள 484 மதுபாட்டில்களை திருடிச் சென்று விட்டனர்.

மறுநாள் காலை கடையை திறக்கச் சென்ற ஊழியர்கள் கதவு பூட்டு உடைக்கப்பட்டு, மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக ராதாகிருஷ்ணன் கருப்பாயூரணி காவல் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் குருசாமி இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

கீழை நியூஸுக்காக மதுரை நிருபர் கனகராஜ்