Home செய்திகள் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கோலாகலம்..

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கோலாகலம்..

by ஆசிரியர்

முருகப் பெருமானின் அவதார நாளாக வைகாசி விசாகம் கருதப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள முருகன் ஆலயங்களில் வைகாசி விசாகத்திருவிழா கொண்டாடப்படுகிறது. அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகத்திருவிழா நடைப்பெற்றது.

திருப்பரங்குன்றம் வைகாசி விசாகத் திருநாளில் பக்தர்கள் பால் குடம் எடுத்தும், காவடி, மற்றும் பறவை காவடி எடுத்து முருகப் பெருமானை வழிபட்டனர். திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் 10 நாட்கள் விசாக திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான விசாக திருவிழாவின் தொடக்கமாக 9ஆம் தேதி வசந்த உற்சவம் தொடங்கியது. கோவிலுக்குள் உள்ள உற்சவர் சன்னதியில் இருந்து வசந்த மண்டபத்திற்கு தெய்வானையுடன் சுப்பிரமணியசாமி எழுந்தருளினார். அங்கு நீர்நிலையில் அமர்ந்து சுப்பிரமணியசாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதேபோல் 17ஆம்தேதி வரை தினமும் மாலை 6 மணிக்கு வசந்த மண்டபத்தில் சுப்பிரமணியசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக கடந்த 18ஆம் தேதி வைகாசி விசாக திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கீழை நீயூஸுக்காக மதுரை நிருபர் கனகராஜ்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!