அரியநாயகிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டப்பணி எதிரொலி-நெல்லை மாநகரில் போக்குவரத்து மாற்றம்..

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகேயுள்ள அரியநாயகிபுரம் அணைக்கட்டு பகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாநகர பகுதிக்கு குடிநீர் கொண்டு வருவதற்காக குழாய் பதிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

பேட்டை வழியாக திருநெல்வேலி காட்சி மண்டபம் வரை குழாய் பதிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் காட்சி மண்டபம் முதல் கல்லணை பள்ளி, அருணகிரி திரையரங்கு வழியாக திருநெல்வேலி நகரில் உள்ள ஆர்ச் வரை குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

இதனையடுத்து திருநெல்வேலி மாநகரில் 16.05.19 வியாழக்கிழமை முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பேட்டை, சேரன்மகாதேவி, முக்கூடல், கடையம் செல்லும் பேருந்துகள், வாகனங்கள் ஆகியவை நெல்லையப்பர் கோயில், வாகையடி முனை, சந்திப்பிள்ளையார் கோயில், காட்சி மண்டபம் வழியாக செல்லும். அதேநேரத்தில் தென்காசி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் வண்ணார் பேட்டை, தச்சநல்லூர், ராமையன்பட்டி, கண்டியப்பேரி, பழையபேட்டை வழியாக செல்லும்.

போக்குவரத்து மாற்றம் தொடர்பாக வண்ணார்பேட்டை, திருநெல்வேலி ஆர்ச் பகுதியில் அறிவிப்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. தென்காசி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் கண்டியப்பேரி குளம் வழியாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக அங்கு சாலையில் இருந்த மேடு பள்ளங்கள் சரி செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக கண்டியப்பேரி குளக்கரை சாலை வழியாக ஏராளமான லாரிகள் சென்று வருவது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

To Download Keelainews Android Application – Click on the Image

August Issue…

August Issue…