உசிலம்பட்டியில் பெருகி வரும் பெண்கள் அழகு நிலையம்… போலிகள் ஜாக்கிரதை…

பொதுவாக ஆண்களை விட பெண்கள் தங்களது அழகில் அக்கறை காட்ட கூடியவர்கள். தங்களது அழகை மேம்படுத்த அழகு நிலையங்களுக்கு சென்று பேசியல் மற்றும் ப்ளீச்சிங் போன்றவைகளை செய்து தங்களது முகத்துக்கு அழகூட்டுவர். சில பெண்கள் தங்களது உறவினர்கள், காதலர்கள், கணவர்களிடம் அழகாக தோன்ற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து அழகு நிலையங்களுக்கு சென்று முகத்தை அழகாக்குவர். பெண்களின் இந்த மோகத்தால் போலி அழகு நிலையங்கள் புற்றீசல் போல் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகரப் பகுதியில் நாளுக்கு நாள் கடல் அலையைப் போல் பெருக்கெடுத்து பெண்கள் அழகு நிலையங்களை நோக்கி வருகின்றன.  உசிலம்பட்டி நகரப் பகுதியைப் பொறுத்தவரை ஆண்கள் அழகு நிலையங்களை விட அழகு நிலையங்கள் மிகவும் அதிகம். உசிலம்பட்டி பகுதியில் மொத்தம் 100க்கும் மேற்பட்ட பெண்கள் அழகு நிலையங்கள் உள்ளன. இந்த அழகு நிலையங்களை நடத்துபவர்கள் ஒரு சிலர் மட்டும் தான் அதற்கான டிப்ளமோ படிப்பை முறையாக முடித்துவிட்டு சான்றிதழ் வைத்து அதிகாரிகளிடம் அதற்கான உரிமமும் பெற்று, அழகு நிலையங்களை நடத்தி வருகின்றனர்.

ஆனால் சில அழகு நிலையங்களை நடத்துபவர்கள் நாங்கள் வெளிநாட்டில் அழகு கலை படித்துள்ளோம்,. சான்றிதழ் பெற்றுள்ளோம் என பொய்யான தகவலை வைத்து அழகு நிலையங்களை நடத்தி பொதுமக்களையும், பெண்களையும் ஏமாற்றி வருகின்றனர். இதில் சில அழகு நிலையங்களை நடத்தி வருபவர்கள் அனுபவம் இல்லாமல் பணத்தை மட்டுமே வைத்து பியூட்டி பார்லர்களுக்கு தேவையான உபகரணங்கள், பேசியல் கீரிம்கள் போன்றவைகளை குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு பேசியல் செய்து பொது மக்களை ஏமாற்றி வருகின்றனர். குறிப்பாக பெண்கள் செய்து கொள்ளும் பேசியல்களின் வகைகள் விலை ஒவ்வொன்றிற்கும் ரூ500 முதல் 2000ரூ வரை வசூல் செய்கின்றனர். இதனால் சில சமயங்களில் முகத்திற்கு ஒவ்வாமை ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாகும் சூழ்நிலை ஏற்படுகிறது.

ஆகவே பொதுமக்களும் இவ்விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி உண்மை எது, போலி எது என்று அறிந்து கொள்வது மிக அவசியம். ஆகவே   அரசு அதிகாரிகளும் இவ்விசயத்தில்  தலையிட்டு சரியான முறையில் பியூட்டி பார்லர்கள் நடத்தி வருகிறார்களா என அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

August Issue…

August Issue…