அரக்கோணத்தில் நடக்க இருந்த சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்..

அரக்கோணத்தில் சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அரக்கோணம் அருகே உள்ள குருவராஜ பேட்டையை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த 23 வாலிபருக்கும் இன்று திருமணம் நடக்க இருந்தது.

திருமணத்திற்காக நேற்று இரவு பெண் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான உறவினர்கள் கலந்து கொண்டனர். சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் குறித்து வேலூர் சமூகநலத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வேலூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், அரக்கோணம் தாசில்தார் ஜெயக்குமார், வருவாய் ஆய்வாளர் கல்யாணி மற்றும் அரக்கோணம் போலீசார் நேற்று இரவு திருமணம் நடக்க இருந்த மண்டபத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சிறுமிக்கு திருமணம் நடக்க இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சிறுமிக்கு திருமணம் நடத்துவது சட்டபடி குற்றம் என அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர். இதையடுத்து இருவீட்டாரும் திருமணத்தை நிறுத்துவதாக உறுதியளித்தனர். இரு வீட்டாரிடமும் அதிகாரிகள் எழுதி வாங்கினர்.

திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டதால் இருவீட்டார் உறவினர்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்

To Download Keelainews Android Application – Click on the Image

August Issue…

August Issue…