இராமநாதபுரத்தில் ரெட் கிராஸ் சார்பில் இதயம் காப்போம் விழிப்புணர்வு முகாம்..

உலக ரெட் கிராஸ் தினத்தை சிறப்பிக்கும் வகையில், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இராமநாதபுரம் மாவட்ட கிளை மற்றும் ராமநாதபுரம் ஜவஹர் மருத்துவமனை சார்பில் இதயம் காப்போம் விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் ஆலோசனை முகாம் ராமநாதபுரம் சிஎஸ்ஐ பி .எட்., கல்லூரியில் நடந்தது.

ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட செயலர் எம்.ராக் லாணட் மதுரம் தலைமை வகித்தார். வரவேற்றார். மதுரை- ராமநாதபுரம் தென்னிந்திய திருச்சபை திருமண்டில சட்ட ஆலோசகரும், சி எஸ் ஐ ., பி.எட்., கல்லூரி தாளாளருமான தேவ மார்ட்டின் மனோகரன் மார்ட்டின் முன்னிலை வகித்தார். ரெட் கிராஸ் மாவட்ட சேர்மன் எஸ்.ஹாரூன் துவக்கி வைத்தார். இணை செயலர் தி. ஜீவா வரவேற்றார். ரெட் கிராஸ் துணை தலைவர் . அஸ்மாக் அன்வர் தீன், சிஎஸ்ஐ., பி.எட்., கல்லூரி துணை முதல்வர் ஆனந்த் பேசினார். இதய துடிப்பை மீண்டும் இயக்கச் செய்ய மூச்சு பயிற்சியின் அவசியம் குறித்து மாவட்ட முதலுதவி பயிற்றுநர் எஸ்.அலெக்ஸ் செயல் விளக்கம் அளித்தார். இதயம் செயல்படும் விதம், இதயத்தை பாதுகாக்கும் வழிமுறைகள், மூச்சு பயிற்சி அவசியத்தின் விழிப்புணர்வு குறித்து ஜவஹர் மருத்துவமனை மூத்த டாக்டர் எம்.ஜவஹர் பாரூக் பேசினார். முகாமில் கலந்து கொண்ட 65 பேருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அலர்ஜி, ஆஸ்துமா மற்றும் இசிஜி பரிசோதனை செய்து உடல் நல பாதுகாப்பு குறித்து இலவச ஆலோசனை வழங்கினர்.

ரெட் கிராஸ் பொருளாளர் சி. குணசேகரன் நன்றி கூறினார். ஜவஹர் மருத்துவமனை மேலாளர் செந்தில்குமார், யூட் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் பேராசிரியர் ஆ.வள்ளி விநாயகம், ஆயுட்கால உறுப்பினர்கள் என். கார்த்திக், அ.மலைக்கண்ணன் ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை செய்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..