திருநெல்வேலி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் காயம் ..

திருநெல்வேலி மாவட்டம் வரகனூர் பகுதியில் கடந்த பிப்ரவரி 22ம் தேதி நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலியானதை தொடர்ந்து பட்டாசு ஆலை மூடப்பட்டது இன்று 10க்கும் மேற்பட்டோர் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பழைய கழிவு மருந்துகள் கிடந்த இடத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 5 தொழிலாளிகள் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். காயம் அடைந்த குருசாமி, அர்ஜுன், கோபால் ஆகிய 3 பேர் படுகாயத்துடன் சிவகாசி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெoற்று வருகின்றனர். மேலும் காமராஜ். கனகராஜ் ஆகிய இரண்டு பேர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

August Issue…

August Issue…