மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடரும் வறட்சி-காட்டு யானை உயிரிழப்பு..

நெல்லை மாவட்டம் புளியங்குடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, கரடி, புலி, மான், மிளா உள்ளிட்ட பல முக்கிய வனவிலங்குகள் உள்ளன. தற்போது கோடை காலத்தை முன்னிட்டு வனப்பகுதியில் மழையின்றி கடும் வறட்சி நிலவுவதால் அங்குள்ள குட்டைகள், நீர்த்தேக்க தடுப்பணைகளில் போதிய அளவில் தண்ணீர் இல்லை.

இதனால் உணவு மற்றும் தண்ணீரை தேடி வனவிலங்குகள், அருகில் உள்ள பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கும், விளைநிலங்களுக்கும் செல்கின்றன. இந்த நிலையில் புளியங்குடி டி.என்.புதுக்குடி பீட் கன்னிமார் கோவில் சரகம் வனப்பகுதியில் நேற்று காலையில் பெண் யானை இறந்து கிடந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், புளியங்குடி வனச்சரகர் அயூப்கான், வனவர் அசோக்குமார், வன காப்பாளர் செல்லத்துரை மற்றும் வனத்துறை ஊழியர் கள் விரைந்து சென்று, இறந்த யானையை பார்வையிட்ட னர். தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் இறந்த யானையை பரிசோதனை செய்தனர். பின்னர் அந்த யானையை அங்கேயே பள்ளம் தோண்டி புதைக்கப்பட்டது.

இது குறித்து வனத்துறை யினர் கூறுகையில், ‘இறந்த யானைக்கு வயது 5 என்றும் அந்த யானை செரிமான கோளாறால் இறந்து உள்ளதாகவும், அதாவது, அந்த யானை அதிகளவில் புற்களை சாப்பிட்ட பின்னர் குட்டையில் உள்ள சூடான தண்ணீரை அதிகம் பருகி உள்ளது. இதனால் அதற்கு செரிமான கோளாறு ஏற்பட்டு இறந்து உள்ளது‘ என்று தெரிவித்தனர்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..